மாவட்ட செய்திகள்
ஆம்பூரில் செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் பழுது பார்ப்போர் நிர்வாகிகள் சங்க ஆலோசனை கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அனைத்து செல்போன் விற்பனையாளர்கள், பழுது பார்ப்போர் மற்றும் ரீசார்ஜ் விற்பனையாளர்கள் சங்கத்தின் துவக்க விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த துவக்க விழா நிகழ்ச்சிக்கு சரவணன், ரபீக் அஹமது தலைமை தாங்கினர். சையத் பாபு , சதீஷ்குமார், தியாகு, இம்ரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூபதி அனைவரையும் வரவேற்று பேசினார்.
சங்க உறுப்பினர்களுக்கு பணி பாதுகாப்பு , புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி செல்போன் பழுது பார்த்தல் பயிற்சி அளித்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் அவ்வப்போது பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்சியில் ஆம்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு சான்றிதழும், அடையாள அட்டையும் மற்றும் நினைவு பரிசுகளையும் வழங்கினார். காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம், வாணியம்பாடி தலைவர் பொன்னுசாமி திருப்பத்தூர் கே. பாஸ்கரன், வணிகர் சங்க நிர்வாகி அண்ணாமலை, எல்லையம்மன் கோயில் நிர்வாகி சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக குமரகுரு நன்றியுரை ஆற்றினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.