மாவட்ட செய்திகள்
75வது சுதந்திர தின விழா மற்றும் அமுத பெருவிழா கொண்டாட்டம், தேனியில் பல்துறை விளக்க கண்காட்சி துவக்கம்.
75வது சுதந்திர தின விழா மற்றும் அமுத பெருவிழா கொண்டாட்டம், தேனியில் பல்துறை விளக்க கண்காட்சி துவக்கம்.
75-வது சுதந்திர தினவிழா சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை முன்னிட்டு பல்துறை பணிவிளக்க கண்காட்சியை தேனி மாவட்ட ஆட்சியர் கே.வீ.முரளிதரன் நேற்று துவக்கி வைத்தார். ஏப்ரல் 2ம் தேதி வரை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடக்கிறது.
75-வது சுதந்திர தினவிழா சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை முன்னிட்டு தேனி பழனிச்செட்டி பட்டி பேரூராட்சிப் பகுதிக்குட்பட்ட மேனகா மில்ஸ் அருகே உள்ள திடலில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி துவங்கியுள்ளது.
கண்காட்சியை தேனி மாவட்ட ஆட்சியர் கே.வீ.முரளிதரன் நேற்று துவக்கி வைத்தார். மாவட்ட எஸ்.பி., பிரவின் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி, வனத்துறை அதிகாரி திவ்யா, திட்ட அலுவலர் தண்டபாணி,
சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், பெரியகுளம் சரவணகுமார், ஆண்டிபட்டி மகாராஜன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துவங்கி மீன்வளத்துறை, வனத்துறை, காவல்துறை, குடும்ப நலத்துறை, சமூக நலத்துறை, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அரங்குகளில் அரசின் செயல் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு துறை சார்ந்த தயாரிப்பு பொருட்கள் துறை தொடர்பான காண்பதற்கரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக பள்ளி கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்ட மேடையில் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. இதனால் கண்காட்சியை
திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
ஏப்ரல் 2ம் தேதி வரை மாலை 5 மணி முதல் இரவு 09.00 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 29ஆம் தேதி விழா திடலில் இருந்து மாரத்தான் ஓட்ட மும், நிறைவு நாளான ஏப்ரல் 2ஆம் தேதி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.