மாவட்ட செய்திகள்
ஆம்பூர் அருகே செல்போனில் டிக் டாக் பார்த்துக் கொண்டிருப்பதை அண்ணன் கண்டித்ததால் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.
ஆம்பூர் அருகே செல்போனில் டிக் டாக் பார்த்துக் கொண்டிருப்பதை அண்ணன் கண்டித்ததால் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் முனியப்பன் . இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ள நிலையில் மகள் மீனாட்சி (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாதனூர் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் உயர் நிலைபள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் . மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் அடிக்கடி செல்போனில் டிக் டாக் பார்த்துக் கொண்டிருப்பதை வாடிக்கையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் நேற்று வழக்கம் போல் வீட்டில் செல்போனில் டிக் டாக் பார்த்துக்கொண்டிருப்பதை அவரது இளைய அண்ணன் கண்டித்ததாக கூறப்படும் நிலையில் மனமுடைந்த பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஆம்பூர் கிராமிய போலீஸார் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் டிக் டாக் மோகம் அதிகமான பள்ளி கல்லூரி மாணவர்கள் இளைஞர்களை சீரழிவுக்கு கொண்டு செல்லும் நிலையில் மத்திய மாநில அரசுகள் டிக் டாக் மற்றும் ஆன்லைன் கேம் விளையாட்டினை முற்றிலுமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.