BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் அமுதம் பெருவிழா மாரத்தான் தொடர் ஓட்டம்.

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் அமுதம் பெருவிழா மாரத்தான் தொடர் ஓட்டம் நடைபெற்றது இதனை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் பானு ரெட்டி மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினார்.

மக்கள் செய்தி தொடர்பு துறை மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு அமுதம் பெருவிழா என்ற தலைப்பில் மாரத்தான் தொடர் ஓட்டம் போட்டி இன்று நடத்தப்பட்டது கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் முன் துவங்கிய இந்த போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயச்சந்திரன் ரெட்டி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் இதில் மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் மோகன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் தொடர் ஓட்டப் போட்டியில் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த விடுதி மாணவ மாணவியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையம் முன்பு துவங்கிய மாரத்தான் ஓட்டம் தொடர்ந்து ராயக்கோட்டை மேம்பாலம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், வழியாக சென்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது, இந்த மாரத்தான் ஓட்டத்தில் முதல்பாதியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்று ஓடினர்.

நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )