மாவட்ட செய்திகள்
சின்னாளபட்டி -மாநில அளவிலான கைப்பந்து கூடைப்பந்து கபடி போட்டியில் திருச்சி, சென்னை, திண்டுக்கல் அணி சாம்பியன்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து, கூடைப்பந்து ,கபடி போட்டிகளில் முறையே திருச்சி, சென்னை, திண்டுக்கல் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றனர். இதில் டாக்டர் டி எஸ் சௌந்திரத்தின் 33 ஆம் ஆண்டு நினைவாக கல்லூரிகளுக்கு இடையேயான மாநில கைப்பந்து போட்டி திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்தன. இதில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி அதேநாளில் தொடங்கப்பட்டது. மாநில அளவிலான கபடி போட்டி அடுத்த நாள் தொடங்கியது. இதில் கையுந்துப்பந்து போட்டியில் திருச்சி புனித வளனார் கல்லூரி அணி, சென்னை சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்அணி, ஈரோடு கொங்கு அறிவியல் கலைக் கல்லூரி அணி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கூடைப்பந்து போட்டியில் சென்னை சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவன அணி, கோவை பி ஜிஎஸ் கலை அறிவியல் கல்லூரி, திருச்சி புனித வளனார் கல்லூரி அணி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர் .கபடி போட்டியில் ஜி டி என் கல்லூரி அணி, காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் அணி, மதுரை எஸ்வி என் கல்லூரி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி வாகை சூடினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
