மாவட்ட செய்திகள்
பன்றிமலை- ஊராட்சி மன்றத்தலைவர் தலைவர் தலைமையில் பழங்குடி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

திண்டுக்கல் மாவட்டம் கடலூர் ஊராட்சி சோலைக்காடு கிராமம் அருகே உள்ள பழங்குடி இன மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்த கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு தண்ணீர் கேட்ட பழங்குடியின மக்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தனிநபர் மிரட்டுவதாகவும், தங்களது பகுதியில் தண்ணீர் இல்லாமல் தவிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கிணற்றையும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றையும் மீட்டுத்தர வேண்டும் என கோரி பழங்குடியின மக்கள் பன்றிமலை ஊராட்சி தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திண்டுக்கல்
