BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஏற்காட்டில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஏற்காட்டில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினர் இரண்டாவது நாளாக இன்று பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய தொழிற்சங்கத்தின் இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நீலமலை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் நல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )