மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 137 பேர் கைது.
திருச்சி மாவட்டம், முசிறி ,தொட்டியம், தா.பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கட்டுமான சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்தனர்.
முசிறியில் தொட்டியத்தில் காட்டுபுத்தூரில் தா.பேட்டை ஆகிய ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 137 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.