மாவட்ட செய்திகள்
அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தையொட்டி தஞ்சையில் இன்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று இரண்டாவது நாளாக அகில இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தம் நீடித்தது இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இதில் ஏஐடியுசி சிஐடியு ஐஎன்டியூசி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உள்பட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.