மாவட்ட செய்திகள்
பள்ளி வாகனங்கள் இயக்குவது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளி நிர்வாகங்கள் தான் பொறுப்பு. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
பள்ளி வாகனங்கள் இயக்குவது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளி நிர்வாகங்கள் தான் பொறுப்பு. தவறிழைக்கும் பள்ளிகள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
தஞ்சையில் சமூக நலத்துறை சார்பில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா , மற்றும் அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பின்னர் அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் பழுதடைந்த 10, 030 பள்ளி கட்டிடங்கள் இடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் அன்பழகன் பெயரில் 5 ஆண்டுகளில் 18,000 வகுப்பறைகள் 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைகள் மட்டுமல்லாமல் ஆய்வுகூடம், சமையல் கூடம் கழிவறை உள்ளிட்ட அனைத்தும் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட உள்ளது என்றவர், பள்ளிப் பேருந்தை இயக்க வேண்டும் என்றால் அதற்காக தனியாக அரசாணை உள்ளது, அந்த விதிமுறையை பின்பற்றி தான் பேருந்து இயக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் வரும் மாணவர்களை உதவியாளர்கள், இரண்டு ஆசிரியர்கள் பாதுகாப்பாக இறக்கி வகுப்பறை வரை பாதுகாப்புடன் செல்வதை உறுதி செய்யவேண்டும், இதை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் தகுந்த ஆலோசனை வழங்கப்படும் என்றார்.. மாணவர்களின் ஒழுங்கீனங்களை சரி செய்ய பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் 2 இலட்சம் மாணவர்களுக்கு 1100 ஆசிரியர்கள் மூலம் கவுன்சில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பேட்டி அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.