மாவட்ட செய்திகள்
அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா:நோன்பு சாட்டுதலுடன் நாளை துவக்கம்.
உடுமலையில் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் 15 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பங்குனி அம்மாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை மாலை நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டும் வழக்கம் போல் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நாளை துவங்க உள்ளது.
இதை தொடர்ந்து ஏப்ரல் 12 ம் தேதி மாலை கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 14 ம் தேதி இரவு வாஸ்துசாந்தி, கிராம சாந்தி பூஜையும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 15 ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி துவங்க உள்ளது. இதை தொடர்ந்து ஏப்ரல்19 ம் தேதி பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 20 ம் தேதி காலையில் மாவிளக்கு பூஜையும், மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இந்நிலையில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 21 ம் தேதி காலை 7 மணி அளவில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. இதை தொடர்ந்து ஏப்ரல் 22 ம் தேதி இரவு 8 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு குட்டைத் திடலில் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இறுதியாக ஏப்ரல் 23 ம் தேதி மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி, கொடியிறக்க நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை ஒட்டி தினசரி கோவில் வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரிகள் நடைபெறுகிறது. மேலும் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள குட்டைத் திடலில் தினசரி ஆர்க்கெஸ்ட்ரா, ஆடல் பாடல் நிகழ்ச் சிகள், இன்னிசை கச்சேரிகளும் நடைபெறும். பரம்பரை அறங்காவலர் யுஎஸ்எஸ்.ஷிரிதர், கோவில் செயல் அலுவலர் வெ.பி. சீனிவாசன் மற்றும் நிர்வாகி கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.