தலைப்பு செய்திகள்
ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் இணைகிறது ஹெச்டிஎஃப்சி லிமிடெட்.
ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் ஹெச்டிஎஃப்சி லிமிடெட் இணைய உள்ளது. இந்த தகவலை பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபியிடம் ஹெச்டிஎஃப்சி வங்கி கூறியுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனங்களில் ஒன்றாக ஹெச்டிஎஃப்சி விளங்குகிறது. இதில் உள்ள மற்றொரு நிறுவனமான ஹெச்டிஎஃப்சி பேன் வங்கி சேவை பிரிவு இயங்கி வருகிறது. இதனிடையே, ஒரே குழுமத்தை சேர்ந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைய உள்ளன. இந்த இணைப்பு தொடர்பாக ரிசர்வ் உள்ளிட்ட அமைப்புகளின் அனுமதி கோரப்பட்டிருப்பதாக ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
இந்த இணைப்பு மூலம் சந்தை மதிப்பு அடிப்படையில் 3-வது பெரிய நிறுவனமாக உருவெடுக்கிறது ஹெச்டிஎஃப்சி வங்கி.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்