BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மத்திய அரசு உடனடியாக தொடர்ந்து உயர்ந்துவரும் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தொடர் விலை உயர்வை குறைக்க  கிருஷ்ணகிரியில்  மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.

மத்திய அரசு உடனடியாக தொடர்ந்து உயர்ந்துவரும் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தொடர் விலை உயர்வை குறைக்க வேண்டும் குறைக்க முடியாவிட்டால் நாட்டைவிட்ட ஓடிவிடு என வழியுறுத்தி கிருஷ்ணகிரியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொடர் மக்கள் விரோதப்போக்கினை கடைப்பிடித்து வரும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


கிருஷ்ணகிரி தலைமை தபால்நிலையம் முன்பாக நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன்
தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தின் போது நாடுமுழுவதும் ஏழை எளிய மக்கள் பாதிக்கும் வகையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையினை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசின் போக்கினை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

மேலும் இந்தக் கண்டான ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்ட கிழக்கு மாவட்டத் துணைத்தலைவர் சேகர், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, முன்னால் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகரத் தலைவர் லலித் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்துக் கலந்துக் கொண்டு நாள்தோறும் பெட்ரோல் டீசல், சமையல் எரிவரிவு சிலிண்டர்களின் விலையை குறைக்கவேண்டும், விலையை குறைக்க முடியாவிட்டால் நாட்டைவிட்டே ஓடிவிடு என வழியுறுத்தி மோடிக்கு எதிராக கண்டன உரை ஆற்றினார்கள்.
மத்திய அரசினைக் கண்டித்து நடத்தப்பட இந்த கண்டன ஆர்பாட்டத்தின்போது ஏராளமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துக்
கொண்டு மத்திய அசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினார்கள்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )