BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வை திரும்ப பெறும் வகையில் சட்டமன்றத்தில் அதிமுக செயல்பாடுகள் இருக்கும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ உறுதி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை அதிமுக நகர செயலாளர் முத்துராஜ் ஏற்பாட்டில் மற்றும் கோவில்பட்டி அருகே இனம்மணியாச்சியில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ்,மாவட்ட குழு தலைவி சத்யா, ஏற்பாட்டில் மற்றும் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள 26 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் வள்ளியம்மாள் மாரியப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற நீர் ,மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில்,முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்,மோர் மற்றும் இளநீர், பழரசம், தர்பூசணி, பழம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதற்கு முன்னதாக கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார்.

ந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர்கள் கவியரசு, செண்பக மூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் பிரியா குருராஜ்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கழகப் பேச்சாளர் பெருமாள்சாமி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, வழக்கறிஞர் சங்கர் கணேஷ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், வார்டு பிரதிநிதி செந்தில், அதிமுக நிர்வாகிகள் ஆரோக்கியராஜ்,பத்மாவதி,மகேஷ் பாலா,பழனி குமார், கோபி, முருகன்,பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்:

தமிழ்நாடு சரித்திரத்தில் காணாத அளவுக்கு 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி உள்ளனர். அதற்குரிய கட்டணம் செலுத்தபோகும் போது தான், சொத்தை விற்று சொத்து வரி செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். மக்கள் மீது சுமத்தப்பட்ட சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என நாளை அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மக்கள் மன்றத்தில் மட்டுமல்லாது, சட்டமன்றத்தில் இந்த பிரச்சினைக்கு முடிவுகட்டும் வகையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு, ஆளும்கட்சிக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்து, அதனை திரும்ப பெறுகிற வகையில் என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வோம்.

சொத்து வரி உயர்வு தொடர்பாக மத்திய அரசின் மீது பழிபோட்டு அமைச்சர் நேரு தப்பிக்க பார்க்கிறார். மத்திய அரசு எங்களது நிதி வர வேண்டுமென்றால், நீங்கள் இவ்வளவு வருவாய் காட்ட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், சொத்து வரியை 15 சதவீதம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசு ஆதாரப்பூர்வமாக எதையும் கொடுத்துள்ளதா என அமைச்சரை சட்டமன்றத்தில் தெரிவிக்க சொல்லுங்கள். இவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்று கூற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படியே இருந்தாலும், அவர்கள் மாநில சுயாட்சியில் தலையிட மாட்டார்கள். அப்படி அவர்கள் தலையிட்டிருந்தால், அதனை பெரிய பிரச்சினையாக திமுக அரசு கொண்டு வந்திருக்கும். இதற்கு மத்திய அரசு தகுந்த பதில் அளிக்கும்.

ஒரு நல்ல ஆட்சி நடக்கிறது என்றால் அதனை ராம ராஜ்ஜியம் என கூறுவார்கள். இது ஒரு பழமொழி.

இதில் மதத்துக்கும், ஆன்மீகத்துக்கு வழியில்லை. அப்படிப்பட்ட ஆட்சியை நாங்கள் கொண்டு வருவோம் என செல்லூர் ராஜூ சொன்னது தப்பில்லை. நாங்கள் மீண்டும் வருவோம்.

5 பவுன் வரை நகை அடகு வைத்திருந்தால், அந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தனர். இதில் என்ன தகுதி பார்க்க வேண்டியது உள்ளது. தவறு நடந்திருந்தால், அவற்றை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற அனைவருக்கும் வழங்கியிருக்கலாம். தற்போது தொழில் வரி, சொத்து வரி, அதற்கு அடுத்தபடியாக மின்சாரம் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என இன்னும் உள்ளது. இது தான் இந்த அரசு வைத்துள்ள பொருளாதார நிபுணர்களின் வேலை. நிழலின் அருமை வெயிலில் என்பதை போல், எந்த ஆட்சி சிறந்த ஆட்சி என்பதை மக்கள் ஒப்பிட்டு பார்ப்பார்கள், என்றார் அவர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )