மாவட்ட செய்திகள்
தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் ஈடுபட்டு வருகின்றார்.

சுமார் 50 ஏக்கர் பரப்பளவு உள்ள நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்ட கரும்பு பயிர்கள் அழிக்கப்பட்டு வருகிறது
சுமார் 70க்கும் மேற்பட்ட வருவாய் துறை பணியாளர்கள் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் பயிர்களை அழித்து வருகின்றனர்
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது அதில் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியானது தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்று வருகிறது இப்பணிகளை அணைக்கட்டு வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்
இன்று நடைபெற்று வரும் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியானது அணைக்கட்டு அடுத்த தட்டாங்குட்டை கிராம பகுதியில் செல்லும் உத்திர காவிரி ஆற்றில் பயிரிடப்பட்டுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கரும்பு நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர் இன்று அப்பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் உடன் இணைந்து வருவாய்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்
தட்டாங்குட்டை பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர் இதில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு இப்பகுதி விவசாயிகளும் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் தங்களுக்கு ஒரு வார காலம் அனுமதி வழங்கினார் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பு தாங்களே அகற்று விடுவதாகவும் பயிர்களை சேதப்படுத்த வேண்டாம் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இதனை ஏற்க மறுத்த வட்டாட்சியர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென அவ்வபோது நோட்டீஸ் வழங்கி வருவதாகவும் ஆகையால் இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல எனவும் பொதுமக்களுக்கு தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
