மாவட்ட செய்திகள்
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரம் பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன்.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரம் பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.

தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு பிராமணாள் கைங்கர்யம் சார்பில் பால் குடம் எடுக்கப்பட்டது. 89ம் ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் பெண்கள் உள்பட ஆயிரம் பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து, தோளில் காவடி ஏந்தி தஞ்சை மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்யங்கள் இசைக்க புறப்பட்டு, ராஜவீதிகள் வழியாக சென்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

அங்கு அம்மனுக்கு பக்தர்களால் எடுத்து வரப்பட்ட பால் அபிஷேகம் செய்யப்பட்டன.



உலக நலன் வேண்டியும், வெயில் காலங்களில் வரும் அம்மை போன்ற நோய்கள் தாக்காமல் பாதுகாக்கவும், கல்வி வளம் வேண்டியும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பால் குடம் எடுத்து அம்மனுக்கு தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
