BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சையின் மையப் பகுதியில் 20 ஏக்கரில் அமைந்துள்ள “குப்பை கிடங்கை” அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம்.

தஞ்சையின் மையப் பகுதியில் 20 ஏக்கரில் அமைந்துள்ள “குப்பை கிடங்கை” அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம். மாநகராட்சி சார்பில் புதிதாக ஆயிரம் வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு பணிகள் இன்னும் 4 மாதங்களில் துவங்கும் என தஞ்சை மாநகர மேயர் சண்.இராமநாதன் பேட்டி.

தஞ்சை மாநகரின் மையப்பகுதியான ஜெபமாலை புரத்தில் பல ஆண்டுகளாக சுமார் 20 ஏக்கர் நிலத்தில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட குப்பைகள் சேமிக்கப்படும் சேமிப்பு கிடங்காக செயல்பட்டுவரும் நிலையில் , இக்குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி பற்றியும் அதனை சுற்றி உள்ளவர்களுக்கு சுவாசக்கோளாறு, புற்றுநோய் உள்ளிட்டவைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் அக்குப்பை கிடங்கை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் புதிதாக அமைந்த தஞ்சை மாநகராட்சியால் தற்போது அப்பகுதி மக்களுக்கு விடியல் பிறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

4 ராட்சத இயந்திரங்கள் அமைக்கப்பட்டு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, குப்பைகளை அகற்றும் பணி என்பது தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று இப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட தஞ்சை மாநகர மேயர் சண்.இராமநாதன், மற்றும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மாநகராட்சி அலுவலர்கள் , மற்றும் பணிகளை மேற்கொண்டுள்ள நிறுவன ஊழியர்களிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேயர் சண்.இராமநாதன்.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, எதிர்பார்ப்பு நிறைவேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

நான்கு ராட்சத இயந்திரங்கள் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்படும் நிலையில் இன்னும் கூடுதலாக நான்கு இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, குப்பைகள் முழுவதும் 4 மாதத்தில் அகற்றப்பட்டு விடும்.

பிறகு 190 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரம் வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி துவங்க உள்ளது.. இதன் மூலம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வர உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )