மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துமனை இரத்ததான முகாம்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துமனை இரத்ததான முகாம் நடந்தது. கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதுகுளத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் சார்பில் நடந்தது. வட்டார மருத்துவர் நெப்போலியன் அரசு மருத்துவமனை மருத்துவர் மனோஜ் தலைமை வகித்தனர்.அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வாலைஆனந்தம் ,செவிலியர்கள் சண்முகவள்ளி, இளங்கோ முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் நேதாஜி அனைவரையும் வரவேற்றார். முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்தம் கொடுத்தனர். முடிவில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பேராசிரியர் நன்றி கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்