மாவட்ட செய்திகள்
காரைக்காலில் இருந்து சொகுசு காரில் கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் -2 பேர் கைது.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் மங்கநல்லூர் பகுதிகள் சொகுசு காரில் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் பெரம்பூர் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
பாலையூர் காவல் ஆய்வாளர் விசித்திராமேரி (பொறுப்பு பெரம்பூர்) பெரம்பூர் உதவி ஆய்வாளர் இளையராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் காளிதாஸ், ரகுராமன், தலைமை காவலர் ராஜாராமன், தனிப்பிரிவு காவலர் பிரபாகரன், காவலர் பிரேம்குமார் ஆகியோர்கள் மங்கநல்லூர் கடைவீதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது காரைக்காலில் இருந்து வந்த சொகுசு கரை நிறுத்தி சோதனை செய்ததில்
அந்த காரில் 480 மது பாட்டில்கள், 800 லிட்டர் பாண்டி சாராயம் வாகனத்தில் இருப்பது தெரியவந்தது அதைத்தடர்ந்து , சந்திரபாடி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுனர் மணிகண்டன், வரிச்சுக்குடியை பகுதியை சேர்ந்த பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்திவரப்பட்ட மதுபாட்டில்களை வாகனத்துடன் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.