மாவட்ட செய்திகள்
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழா – புதிய நிர்வாகிகள் பேட்டி.
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழா – புதிய நிர்வாகிகள் பேட்டி
திருச்சியில் புகழ் பெற்ற நத்தர்ஷா பள்ளிவாசலில் வருடந்தோறும் சந்தனக்கூடு விழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம்.
இதுதொடர்பாக இன்று பள்ளிவாசல் அலுவலகத்தில் வக்பு வாரியத்தால் புதிய நிர்வாகியாக பதவியேற்ற சையத்சலாவுதீன், முகமதுகெவுஸ், நூர்தீன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய சையத்சலாவுதீன் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆகிய நாங்கள் மூன்று பேரும் ஒன்றிணைந்து தர்காவுக்கு தேவையான அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்துவோம். மேலும் நாங்கள் பதவியேற்று முதன்முதலாக 1025ம் ஆண்டு சந்தனக்கூடு விழா வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை ஏற்று நடத்துவது பெருமைக்குரிய விஷயமாகும். மேலும் இந்த சந்தனக்கூடு விழாவிற்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களுக்கு உரிய முன்னேற்பாடு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.