மாவட்ட செய்திகள்
திருச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஆட்டோ மோதல் – சம்பவ இடத்தில் பெண் பலியான பரபரப்பான சிசிடிவி காட்சி.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் அதே பகுதியில் தனது ஆட்டோவை ஓட்டி வந்த பொழுது சாலையில் வைத்து இருந்த பேரிகார்டு மீது எதிர்பாராத விதமாக மோதியது. அப்போது திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் எதிரே ஒட்டி வந்த ஆட்டோ மீது பேரிகார்டு மோதியதில் பிரதீப்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிரே நடந்து வந்துகொண்டிருந்த பெண் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பலியான பெண் ஸ்ரீரங்க பகுதியை சேர்ந்த ராதா (60) என்பதும் அவர் சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.
தொடர்ந்து காவல்துறையினர் விபத்தில் சிக்கி காயமடைந்த ஆட்டோ ஓட்டுனர்களை பொதுமக்கள் உதவியுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோ ஓட்டி வந்து மோதிய ஹரிஹரன் போதையில் ஆட்டோவை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து தொடர்பான சிசி காட்சியை வைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.