BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நல்லூர் சேர்மன் மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு : திமுக உறுப்பினர்கள் வாக்களிப்பு, பாமக உறுப்பினர்கள் 8 பேர் ஆப்சென்ட்.

நல்லூர் சேர்மன் மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு : திமுக உறுப்பினர்கள் வாக்களிப்பு, பாமக உறுப்பினர்கள் 8 பேர் ஆப்சென்ட்

தீர்மானம் வெற்றி பெற்றதாக திமுகவினர் கொண்டாட்டம்.

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் துணை பெருந்தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த மறைமுக வாக்கெடுப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது,

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நல்லூர் ஒன்றியத்தில் நடைபெற்ற 21 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக தரப்பில் 7, தி.மு.க. தரப்பில் 7, பா.ம.க. தரப்பில் 2 சுயேட்சைகள் கவுன்சிலர்கள் 5 பேர் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க., மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன், பாமக சேர்ந்த செல்வி ஒன்றியக்குழு பெருந்தலைவராகவும் அதிமுகவைச் சேர்ந்த ஜான்சி மேரி துணைத் பெருந்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர்.

ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்று குழு உறுப்பினர்களின் நிதியை வளர்ச்சிப் பணிகளுக்கு பிரித்து கொடுக்காமல் அப்படியே வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் திமுக மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர் மனோகரன் திமுகவில் இணைந்து போன்றவற்றால் திமுகவின் பலம் அதிகரித்தாகக கூறப்படுகிறது,

இதனால் கடந்த ஓராண்டாக நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் பெரும்பான்மையான திமுக மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையொப்பமிட்டு இயற்றப்படும் தீர்மானத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்து வந்தனர்.

இதனிடையே கடந்த மாதம் தி.மு.க., தரப்பு முத்துக்கண்ணு தலைமையிலான 13 ஒன்றிய கவுன்சிலர்கள், விருத்தாசலம் ஆர்.டி.ஓ.,ராம்குமாரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற கொண்டுவரக் கோரி மனு அளித்தனர் அதன் பெயரில் ஏப்ரல் ஏழாம் தேதி தீர்மானத்தின் மீதான மறைமுக வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு செய்து உறுப்பினர்கள் அனைவருக்கும் கலந்து கொள்ள கொள்ள தபால் அனுப்பப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடி ஏழாம் தேதி காலை 10 மணிக்கு தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு தொடங்கியது சற்று பதற்றம் அதிகரித்ததால்
காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் சிவா, ஆரோக்கியராஜ் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட போலீஸார் ஆங்காங்கே பேரிகாட் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திமுக தரப்பு 13 உறுப்பினர்கள் பலத்த தொண்டர்களின் பாதுகாப்புடன் வேனில் வந்திறங்கி வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அலுவலகக் கூட்டரங்கில் சென்றனர், பாமக தரப்பு கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த வேளையில் திடீரென 8 உறுப்பினர்கள் ஆட்சியரை சந்தித்து தீர்மானம் வெற்றி அடைய பெரும்பான்மை ஆதரவு ஐந்தில் நான்கு பங்கு அதாவது 16 உறுப்பினர்கள் ஆதரவு முன்மொழிபவர் ஒருவர் என 17 உறுப்பினர்கள் ஆதரவு திமுக தரப்பிற்கு இல்லை எனக் கூறி மனு அளித்து நிருபர்களை சந்தித்து பேசினர்.

இதனிடையே வாக்கெடுப்பில் திமுக தரப்பில் 13 கவுன்சிலர்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர், பாமக தரப்பு 8 கவுன்சிலர்கள் வாக்கெடுப்பில் வராததால் வாக்கெடுப்பை முடித்துக்கொண்டு கோட்டாட்சியர் ராம்குமார் வாக்கு பெட்டியை எடுத்துச் சென்றார்.

தொடர்ந்து பதற்றம் அதிகரித்ததால் உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி போலீசார் அவர்களை வேனில் அனுப்பி வைத்தனர். சிறிது நேரம் கழித்து திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி 13 உறுப்பினர்களோடு அலுவலகம் அருகே வந்து நிருபர்களை சந்தித்தார் அப்போது பெரும்பான்மைக்கு 17 வாக்குகள் தேவைப்படும் வேலையில் கூட்டத்திற்கு முறையாக அழைப்பு கொடுத்தும் பாமக தரப்பு கலந்து கொள்ளாததால் சேர்மனாக திமுக கவுன்சிலர் முத்துக்கண்ணு 13உறுப்பினர்கள் ஆதரவோடு வெற்றி பெற்றதாக கூறினார் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து கவுன்சிலர் முத்துக்கண்ணு விற்கு மாலை அணிவித்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர் பின்னர் வீடு தந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

ஆனால் இதுகுறித்து கோட்டாட்சியர் ராம்குமாரிடம் கேட்ட போது இந்நிலை குறித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் அரசுதான் முடிவு செய்யும் என கூறினார். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )