மாவட்ட செய்திகள்
தேனி திமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திமுகவைச் சேர்ந்த ரேணு பிரியா, இன்று முதல் நகராட்சித் தலைவர் பணிகளை துவக்கினார்.
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக திமுக கட்சி தலைமை அறிவித்திருந்த நிலையில் கூட்டணி கட்சி தர்மத்தை மீறி திமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திமுகவைச் சேர்ந்த ரேணு பிரியா, இன்று முதல் நகராட்சித் தலைவர் பணிகளை துவக்கினார்.: அதன்படி தேனி அல்லிநகரம் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் ரேணு பிரியா தலைமையில் நடந்து வருகிறது. நடக்கிறது.
33 உறுப்பினர்களை கொண்ட தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டத்தில் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக உறுப்பினர் பாலமுருகன் உட்பட 8 திமுக உறுப்பினர்கள், 2 அமமுக உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதில் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினா செல்வம் உள்ளிட்ட 10 திமுக உறுப்பினர்கள், 7 அதிமுக உறுப்பினர்கள், 2 காங்கிரஸ், 2 சயேட்சைகள, ஒரு பாஜக உறுப்பினர் ஆகியோர் பங்கேற்கவில்லை.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.