BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செம்பனார்கோவில் கடைவீதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்- முன்னாள் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அதிமுக வடக்கு ஒன்றிய கழக சார்பில் பல்வேறு இடங்களில் பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும் , பூம்புகார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் திறந்து வைத்தார.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி அதிகமான வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். இதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டுமென அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நீர், மோர் பந்தல் அமைக்க அறிவுறுத்தினர்.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார் கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செம்பனார்கோவில் கடைவீதியில் நீர் மோர் பந்தலை பூம்புகார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை அதிமுக மாவட்ட கழக செயலாளருமான ஏஸ்.பவுன்ராஜ் தலைமையில் நீர் மோர் பந்தலைத் திறந்துவைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர் போன்றவற்றை வழங்கினார்.

மேலும் குளிர்ச்சியூட்டும் இயற்கை பழச்சாறுகள் மற்றும் நீர் பொதுமக்கள் தாகத்தை தனித்துக் கொள்ள ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஜனார்த்தனம் செம்மார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )