மாவட்ட செய்திகள்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வேலை நாடுகளுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலை நாடுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கூறியதாவது;
இம் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னனி தனியார் துறையை சேர்ந்த 51 நிறுவனங்கள் கலந்துகொண்டனர். இம்முகாமில் 554 ஆண்கள், 976 பெண்கள் உட்பட மொத்தமாக 1530 வேலைநாடுநர்கள் கலந்துகொண்டனர். 110 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு தகுதிகளின் அடிப்படையில் உரிய பயிற்சிக்குப் பின் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் திருமதி. நா.கவிதப்பிரியா, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் எஸ்.நந்தினி ஸ்ரீதர், கலைமகள் கல்லூரி நிர்வாகிகள் நெடுஞ்செழியன், என்.எஸ்.குடியரசு, கல்லூரி அலுவலர்கள் மற்றும் திரளான வேலை நாடுநர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
