மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. போட்டியை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.எம். சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்தனர். வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்பார்த்து ரசித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
