BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அந்த அம்மா பரவால்ல, இந்த ரெண்டு அடிமைகள் மேல கொலை வழக்கே இருக்கு’ – உதயநிதி பளிச்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை அதிமுக ஆதரிப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நிறைவேறாமல் இருக்கும் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டதற்கு, அந்த வாக்குறுதிகளை மட்டுமல்ல ஊழல் செய்த அமைச்சர்களை உள்ளே தள்ளுவேன் என்ற வாக்குறுதியையும் விரைவில் நிறைவேற்றுவேன் என்று கூறி வாயடைத்தார். அதை நேற்று சுட்டிக்காட்டி பேசிய திமுக இளைஞரணி தலைவரும்,சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏவிமான உதயநிதி ஸ்டாலின் அதிமுகவின் இருவர்களை அடிமையென்று பேசியது அதிமுகவினரை கடுப்பேற்றியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று, தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை விளக்கம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்காக வாக்களித்தோருக்கு நன்றி தெரிவிக்கும் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அப்துல்லாவிற்கு நான்தான் உதவியாக எல்லோருக்கும் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

சிறு வயதில் நான், அப்துல்லா, அன்பில் மகேஷ் மூவரும் 25 வருஷத்துக்கு முன்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒவ்வொரு தெருவாக, வீடு வீடாக பிரச்சாரம் செய்திருக்கிறோம். திமுகவில் உழைப்பவர்களுக்கு அதற்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் என விளக்கம் அளித்தார். அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவே உதயநிதி மறைமுகமாக இதில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், பத்து மாதகால ஆட்சியில் எத்தனையோ வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். மிச்சம் இருப்பதையும் நிறைவேற்றுவார் நம்பிக்கையுடன் இருங்கள் என கூறினார்.

மேலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறித்து பாஜகவுக்கு அதிமுக முட்டு கொடுக்கிறது என விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், அந்த அம்மா மேலையாவது ஊழல் வழக்குதான் உள்ளது. இந்த இரண்டு அடிமைகள் மீது கொலை, கொள்ளை (கொடநாடு வழக்கு) வழக்கு உள்ளது. பாஜகவிடம் இருந்து இவர்கள் தப்பித்துக்கொள்ளலாம் ஆனால் தலைவர் ஸ்டாலினிடம் இருந்து தப்பவே முடியாது என இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )