மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் தண்ணீர் கேன் ஏற்றி வந்த மினி டெம்போ டூவீலர் மீது மோதி விபத்து.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் தண்ணீர் கேன் ஏற்றி வந்த மினி டெம்போ டூவீலர் மீது மோதி விபத்து. ஈரோடு மாநகராட்சி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எடப்பாடியில் தண்ணீர் கேன் ஏற்றி வந்த மினி டெம்போ டூவீலர் மோதி விபத்து. பூலாம்பட்டியில் இருந்து எடப்பாடி நோக்கி வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் வந்த ஈரோடு மாநகராட்சியின் ஓட்டுநர் குணசேகரன் அதே பகுதியில் இருந்து சுரேஷ் குமார் என்பவர் தண்ணீர் கேன் ஏற்றி கொண்டு வந்த மினி டெம்போ இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் ஈரோடு மாநகராட்சியின் ஓட்டுனர் குணசேகரன் பலத்த காயங்களுடன் எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தண்ணீர் கேன் ஏற்றிவந்த டெம்போ ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
