BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வுதியர்களின் ஆலோசனைக் கூட்டம்.

கடந்த 6 ஆண்டுகளில் ஒன்றிய அரசு வங்கிகளின் வாராக்கடன் 5 லட்சத்தி 46 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்யாமல் தள்ளுபடி செய்துவிட்டது, பெரும் பணக்காரர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர்கள் சொகுசாக வாழ்கின்றனர், சிறிய கடன் வாங்கிய விவசாயிகளிடம் அதிரடியாக கடன் வசூல் செய்வதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் பாரத ஸ்டேட் பாங்க் ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ கடும் குற்றச்சாட்டு:

தஞ்சையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வுதியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள், ஒய்வூதியர்கள் ஏராளமானோர் பங்கேற்ற கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, முன்னாள் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளரும், ஓய்வுதியர் சங்க பொதுச்செயலாளருமான தாமஸ் பிராங்கோ கூறுகையில், ஒன்றிய அரசு கடந்த ஆறு ஆண்டுகளில் வாராக்கடன் 5.46 லட்சம் கோடி ரூபாயை வசூல் செய்யாமல் தள்ளுபடி செய்துவிட்டது.

அனில் அம்பானியின் கம்பெனி திவால் ஆகிவிட்டதாக 45 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்ததால் வங்கி களுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், அதில் 83 சதவிகிதம் தள்ளுபடி செய்து முகேஷ் அம்பானிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது இவை அநியாயம் என்றவர்,

பெரும் பணக்காரர்களின் வாராக்கடனை தள்ளுபடி செய்தால் அவர்கள் சொகுசாக வாழ்கிறார்கள்.

ஆனால் ஏழை விவசாயிகள் கடன் அதிரடியாக வசூல் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டியவர்.

வாராக் கடனை வசூல் செய்திட வலிமையான சட்டங்களை இயற்றி வசூல் செய்ய வேண்டும் என்றவர் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கினால் சிறு தொழில் செய்வோர் விவசாயிகள் உள்ளிட்டோர் கந்து வட்டி காரர்களிடம் 30 சதவிகிதம் வரை கூடுதலாக வட்டிக்கு வாங்கும் அவல நிலை ஏற்பட்டுவிடும் என்றவர் பாரத ஸ்டேட் பாங்க் ஊழியர்களுக்கு 36 ஆண்டுகளாக ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்கிடக்கோரி விரைவில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் , தமிழக முதல்வரையும் சந்தித்து முறையிட உள்ளதாக கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )