BREAKING NEWS

சினிமா

பிரம்மாண்ட எதிர்பார்ப்பில் `கே.ஜி.எப் 2’: பின் வாங்கியது பிரபல ஹீரோ படம்!

பிரம்மாண்ட எதிர்பார்ப்பில் `கே.ஜி.எப் 2’: பின் வாங்கியது பிரபல ஹீரோ படம்!

கே.ஜி.எப் சாப்டர் 2’ படத்துக்கு வட இந்தியாவிலும் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், அந்த படத்துடன் ரிலீஸ் ஆவதாக இருந்த பிரபல ஹீரோவின் படம் தள்ளிப் போயிருக்கிறது.

விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ வரும் 13-ம் தேதி வெளியாகிறது. யாஷ், சஞ்சய் தத் நடித்துள்ள ’கே.ஜி.எப் சாப்டர் 2’ படம் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூரின் ’ஜெர்ஸி’ படமும் 14-ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. இது தெலுங்கில் நானி நடித்து ஹிட்டான ஜெர்ஸி படத்தின் ரீமேக்.

பீஸ்ட் -விஜய், ஜெர்ஸி ஷாகித் கபூர், கே.ஜி.எப் 2- யாஷ்

ஒரே நேரத்தில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆவதால் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுபற்றி நடிகர் ஷாகித் கபூர் கூறும்போது, “நான் விஜய்யின் ரசிகன். அவர் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் நடித்துள்ள பீஸ்ட் அற்புதமான படமாக இருக்கும். இருந்தாலும் அந்தப் படத்தை ஜெர்ஸி படத்துக்கு போட்டியாக நினைக்கவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கே.ஜி.எப் சாப்டர் 2 படத்துக்கு வட இந்தியாவிலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், ஜெர்ஸி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு, வரும் 22-ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளது. இந்தப் படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக வேண்டியிருந்தது. கரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் இதன் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )