மாவட்ட செய்திகள்
நாளை பீஸ்ட் படம் பார்க்க இலவச டிக்கெட்டுடன் விடுமுறை!! கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!!

தமிழ் திரையுலகில் இளைய தளபதியாக தனி முத்திரை பதித்தவர் நடிகர் விஜய். இவரது பீஸ்ட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர்.
சென்னை உட்பட தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளில் பேனர்கள், கட்அவுட்கள், தோரணைகளை அமைக்கும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் பட வெளியீட்டுக்கு பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.
பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஊழியர்கள் அடுத்தடுத்து விடுமுறை கேட்டு விண்ணப்பித்த நிலையில் திருப்பூரில் செயல்படும் நிட்பிரைன் என்ற பின்னலாடை நிறுவனம், சென்னை வேளச்சேரியில் உள்ள ஆரா இன்ஃபோமேட்டிக்ஸ் போன்ற பல நிறுவனங்கள் நாளை விடுமுறை அறிவித்துள்ளன. அத்துடன் நிறுவனங்களே ஊழியர்களுக்கு பீஸ்ட் படத்துக்கான டிக்கெட்களை இலவசமாக வழங்கியும் வருகின்றன. ஊழியர்கள் ‘ஜாலியோ ஜிம்கானா’ துள்ளல்போட தொடங்கிவிட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
