மாவட்ட செய்திகள்
கொள்ளையடிக்கப்பட்ட 131 பவுன் நகைகள் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மாநிலம் வயநாடு கல்பெற்றா பகுதியை சேர்ந்த கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவன்மீது நான் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதும் மொத்தம் 185 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. கொள்ளையடிக்கப்பட்ட 185 பவுன் நகைகளை மீட்க கொள்ளையன் உடன் கேரளா மாநிலம் பனச்சமூடு பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு நகையை விற்றதாக வட இந்தியாவை சேர்ந்த மார்வாடி ஒருவரின் கடையை அடையாளம் காட்டினார்.

உடனே தனிப்படை போலீசார் அங்கு சென்று கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 200 சவரன் நகைகள் தராவிட்டால் கைது செய்து விடுவதாக கூறியதன் பேரில் மார்வாடி சேட்டு பேரம் பேசி 131 சவரன் நகைகளை தனிப்படை போலீசாரிடம் கொடுத்தார்.

தனிப்படை போலீசார் அந்த நகைகளை உருக்கி தர கட்டாயப்படுத்தி அவரிடமிருந்து உருக்கி பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் சரவண குமார் தலைமையிலான போலீசார் நகைகளை மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 4 முதல் தகவல் அறிக்கைகளை காண்பித்து அதில் மொத்தம் 185 சவரன் நகைகள் திருட்டு போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை காண்பித்து நகைகளை ரெக்கவரி செய்துள்ளதாக கூறப்படுகிறது. எல்லாம் சரி நகைகளை ஏன் உறுதி தர கேட்டு தனிப்படை போலீசார் பெற்றுக்கொண்டதால் என்பது தான் புரியாத புதிராக உள்ளது அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட 131பவுன் நகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
