சினிமா
இப்படி பண்ணிட்டீங்க…!! ‘பீஸ்ட்’ விமர்சனம்!
நடிகர் விஜய்யின் 65வது படம் பீஸ்ட். ட்ரைலர் ரிலீசான தினத்தில் இருந்தே இந்த படத்தின் சாயல் என அரை டஜன் படங்களின் லிஸ்ட்டை ரிலீஸ் செய்து இணையதளத்தில் தெறிக்க விட்டார்கள் சினிமா ரசிகர்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.
காஷ்மீர் எல்லையில் தங்கியிருந்து, அங்கிருக்கும் முக்கிய புள்ளியை கைது செய்ய திட்டம் போடுகிறார் வீர ராகவன் விஜய், ஆனால் திடீரென திட்டத்தைக் கைவிட உத்தரவு வர, அதையும் மீறி அங்கிருக்கும் தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறார்.வில்லன் ரிவெஞ்ச் எடுக்க, விஜய்க்கு நெருக்கமான குழந்தை இறந்து விடுகிறது. இதனால் சென்னைக்கும் திரும்பும், விஜய்க்கு, பூஜாவுடன் காதல் வசமகிறது. பூஜாவுடன், விஜய் மாலுக்கு செல்லும் போது, அங்கு திடீரென தீவிரவாதிகள் மாலில் உள்ள பொதுமக்களை சிறை பிடிக்கின்றனர். வீர ராகவனால் கைதான அந்த முக்கிய புள்ளியை விடுவிக்க கோரிக்கை வைகின்றனர். அந்த மாலில் உள்ளவர்களை விஜய் காப்பற்றினாரா, தீவிரவாதியை கொன்றாரா என்பதே மீதிக்கதை.
இயல்பான நடிப்பு, ட்ரேட் மார்க் பார்வை, தெளிவான டைமிங் டயலாக் டெலிவரி, நடனம், ஆவேசம் என ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார் விஜய். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரையில் வீர ராகவானாக விஜய் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். பூஜா, விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் கொடுத்திருக்கும் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
யோகி பாபுவுக்கு அதிக காட்சிகள் இல்லை, விஜய் படம் என்பாதாலேயே படத்தில் தீவரவாதிகளை
காமெடியன்களைப் போல காண்பித்துள்ளார்கள், இதனால் விஜய் வகுக்கும் திட்டங்களின் மீது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சுத்தமாக ஈர்ப்பும் வரவில்லை. படத்தில் விறுவிறுப்பும் மிஸ்ஸிங்.
படத்தின் முதல் பாதி காமெடி, ஆக்ஷன் காட்சிகளால் நிரப்பப்பட்டிருக்கிறதென்றால், இரண்டம் பாதியில் சலிப்பு தான் மிச்சம்!
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.