மாவட்ட செய்திகள்
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை.
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலையில் திடீரென ஆம்பூர் , தேவலாபுரம்,சான்றோர்குப்பம்,வடபுதுபட்டு , சோமலாபுரம் , உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த சூறைக்காற்று ,இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.