மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்- குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் அமைதி கட்டளை சார்பாக வளர் இளம் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு.
திண்டுக்கல் மாவட்டம் விட்டல் நாயக்கம்பட்டி அமைதி தொழிற்பயிற்சி மையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் அமைதி அறக்கட்டளை இணைந்து வளர் இளம் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை திட்ட இயக்குனர் பொறியாளர் ரூப பாலன் தலைமை வகித்தார் .அமைதி அறக்கட்டளையின் மேலாளர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.
பின்னர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை காவலர் சித்திரைச் செல்வி, ஒருங்கிணைப்பாளர் பவித்ரா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு மற்றும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கான பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும் அவசர உதவி எண்கள் 1098, 181 பற்றியும் குழந்தை திருமணம் குறித்தும் பெண்ணின் திருமண வயது 18 ஆணின் திருமண வயது 21 குழந்தைத் திருமணச் சட்டப்படி செல்லுபடி ஆகும் என்பதையும் இதற்கும் குறைந்த வயதில் திருமணம் செய்தால் குற்றமான செயலாகும் என்றும் அறிந்து கொள்ள ஏதுவாக அமையப்பெற்றது.
மேலும் தங்கள் கிராமத்தில் குழந்தை திருமணத்தை தடுப்போம் என்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் சார்பாக தொடர்ந்து கண்காணிப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். முன்னதாக தன்னார்வலர் மணிமேகலை வரவேற்புரையாற்றினார். பணியாளர்கள் சசிகலா ,திவ்யா, நாகலட்சுமி, முனியாண்டி, சுகன்யா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தார்கள். முடிவில் புவனேஸ்வரி நன்றியுரை கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.