அரசியல்
சசிகலா எனக்கு அம்மா போன்றவர்.. நான் அவர்களுக்கு மகள் போன்றவள்.. தெறிக்கவிடும் பாஜக விஜயசாந்தி..!
எப்போது சென்னை வந்தாலும் நான் சசிகலாவை சந்திப்பேன். சசிகலா எனக்கு அம்மா போன்றவர். நான் அவர்களுக்கு மகள் போன்றவள். அம்மாவை பார்க்க வந்தேன். இது அரசியல் சந்திப்பு அல்ல.
அரசியலில் ஜெயலலிதா, சசிகலா என இருவருமே கஷ்டப்பட்டு வந்தவர்கள். அரசியலில் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம், அது நல்லதாகவே நடக்கும் என விஜயசாந்தி கூறியுள்ளார்.
தஞ்சையில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை விவகாரம் செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக பாஜக எம்.பி. சந்தியா ராய், முன்னாள் எம்.பி.யும் தேசிய செயற்குழு உறுப்பினருமான விஜயசாந்தி, தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா தாய் வாக், கர்நாடக மாநில மகிளா மோர்ச்சா தலைவி கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய குழுவை பாஜக தேசிய தலைமை நியமித்திருந்தது. அதன்படி இக்குழு அரியலூர், தஞ்சாவூருக்கு நேற்று சென்று விசாரணையை நடத்தியது. இந்தப் பணிகளை முடித்துக்கொண்டு விஜயசாந்தி சென்னை திரும்பினார்.
இதனையடுத்து, நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி, சசிகலாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயசாந்தி;- எப்போது சென்னை வந்தாலும் நான் சசிகலாவை சந்திப்பேன். சசிகலா எனக்கு அம்மா போன்றவர். நான் அவர்களுக்கு மகள் போன்றவள். அம்மாவை பார்க்க வந்தேன். இது அரசியல் சந்திப்பு அல்ல.
அரசியலில் யார் யார் நல்லது செய்தார்களோ கண்டிப்பாக அவர்களுக்கு நல்லது நடக்கும். தற்போது ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழகத்திற்கு நல்லது நடந்திருக்கும். இப்போதும் அது தான் என் மனதில் இருப்பதும்கூட. ஜெயலலிதாவை போல தான் சசிகலாவும். ஜெயலலிதா, சசிகலா என இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். வருங்காலத்தில் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறேன். அரசியலில் எதுவும் நடக்கலாம். இது நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே என விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலா- விஜயசாந்தி இடையிலான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என கூறப்பட்டாலும், உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் இருவருக்கும் இடையேயான இந்த சந்திப்பு தமிழக அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.