மாவட்ட செய்திகள்
ஈரோடு மாவட்டம் பவானி போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்ச்சி பேரணி.
ஈரோடு மாவட்டம் பவானி போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்ச்சி பேரணி நடைபெற்றது. பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன் துவங்கிய இப் பேரணியை பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது மேட்டூர் மெயின் ரோடு, கூடுதுறை, காளிங்கராயன் பாளையம் வழியாக லட்சுமி நகர் சென்றடைந்தது. இதில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இப் பேரணியில் பவானி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், மற்றும் வனிதா உதவி ஆய்வாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.