மாவட்ட செய்திகள்
சாராய வியாபாரிகள் கைது!
திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி நேதாஜி நகர் மற்றும் தும்பேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ராணி வயது 56, ஜோதி வயது 27, மற்றும் தும்பேரி பகுதியைச் சேர்ந்த தாயம்மாள் வயது38, ஆகிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் இந்த நிலையில் இவர்கள் மீது வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் மற்றும் அம்பலூர் காவல் நிலையத்தில் கள்ளச்சாராயவிற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதால் 3, பேரையும் குண்டர் தடுப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா அவர்கள் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.