BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி மகளிர் சுயஉதவி குழுக்கள் வாங்கிய கடனை அரசே ஏற்று தள்ளுபடி செய்ய இருக்கிறது – பெண்கள் தின விழாவில் கே.என்.நேரு.

திருச்சிராப்பள்ளி பல்நோக்கு சமூக பணி மையம், சுரபி மகளிர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் மகளிர் தின விழா, மஞ்சள் பை விழிப்புணர்வு விழா, மரக்கன்று வழங்கும் விழா, பணி ஓய்வு பணியாளர்கள் பாராட்டு விழா மற்றும் சேம நல நிதி வழங்கும் விழா இன்று ஆர்.சி பள்ளியில் நடைபெற்றது.

இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

விழாவின் சிறப்பு பேச்சாளராக இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், TMSSS இன் தொற்று நோய் விழிப்புணர்வு தூதுவரும் நடிகையுமான கஸ்தூரி கலந்து கொண்டனர்.

இதில் நகர்ப்புற வளச்சித்துறை அமைச்சர் K.N.நேரு பேசிய போது ” மகளிர் சுயஉதவி குழுவை முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் துவக்கி வைத்தார். தற்போதய முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செய்து வருகிறார். இன்னும் 2 நாட்களில் மகளிர் சுயஉதவி குழுக்கள் வாங்கிய கடனை அரசே ஏற்று தள்ளுபடி செய்ய இருக்கிறது என தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )