BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு?

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்முறையாக நீட் விலக்கு மசோதாவைத் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் 6 மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு எந்த முடிவும் எடுக்காமல் திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று குரல்கள் எழுந்தது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்ப ஆர்.என்.ரவி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்ப ஆர்.என்.ரவி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் உறுதியாக இருந்த தமிழக அரசு, பிப்ரவரி 8ம் தேதி மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இருப்பினும், இந்த நீட் தீர்மானத்திலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் விலக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததது.

மேலும், மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தியபோதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது தமிழக அரசு. சட்டமன்ற மாண்பையும் மக்களையும் ஆளுநர் மதிக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினர். ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டிலும் ஆளுநரை விமர்சித்து கட்டுரைகள் வெளிவந்தன. இதனால், தமிழக அரசு ஆளுநர் இடையேயான மோதல் போக்கு அதிகரித்தது.

இந்தச் சூழலில் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நீட் விலக்கு, கூட்டுறவு சங்க சட்டத்திருத்தம் உட்பட மொத்தம் 11 மசோதாக்கள் மற்றும் கடிதங்கள் ஆளுநர் முன் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )