BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

காட்பாடி அரசுப் பள்ளி வளாகத்தில் விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல்: பெற்றோர் ஆசிரியர் சங்கம் செய்ததா ?என விசாரணை!

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஏன் இவர்கள் இங்கு விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளியை சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. வேப்பமரம், புங்கமரம், தேக்குமரம் போன்ற அரிய வகை மரங்கள் சுமார் 20 ஆண்டிற்கு மேலாக இருந்து வருகிறது. இந்நிலையில் மர்ம நபர்களால் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் 150 டன் எடை கொண்ட மரங்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ,1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு மற்றும் வருவாய் துறையினர் நேரில் வந்து வெட்டப்பட்ட மரங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வெட்டப்பட்ட மரங்களை கணக்கெடுத்து வந்தனர்.
வேலூர் மாநகர 1வது மண்டல தலைவர் புஷ்பலதா  பார்வையிட்டு வெட்டப்பட்டுள்ள மரங்கள் என்ன ஆனது என்று ஆய்வு செய்து அதை வெட்டியவர்கள் யார் என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்
மேலும் இப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம்  யாருக்கும் தெரியாமல் இவ்வளவு மரங்கள் எப்படி வெட்டப்பட்டது எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு தகவல் அளித்து அவர் ஆலோசனையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )