BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஆளுநர் மீது தாக்குதல் விவகாரம்… என்ன சொல்லப்போகிறார் முதல்வர்… எடப்பாடி பழனிசாமி கேள்வி!!

after dmk came power crimes in tamilnadu increased says admk edappadi  palanisamy // Crime has increased after DMK came to power … no one is safe  FGN News | FGN News

தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்? என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்? என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு சென்றார். முன்னதாக ஆளுநரை ஆதினத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என தருமபுர ஆதீனத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அவை அனைத்தையும் மீறி ஆளுநர் இன்று தர்மபுர ஆதினம் தினத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்காக அவரது வாகனம் இன்று தர்மபுர ஆதீனத்திற்கு வந்தது. அப்போது அங்கு கருப்பு கொடியுடன் காத்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர், ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பியதுடன், அவருக்கு கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Covid-19: Key Takeaways from CM Edappadi K Palanisamy's Announcement |  Tamil Nadu News

அப்போது ஆளுநரின் கான்வாய் மீது கற்கல், கொடிகள் வீசியெறிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநர் ஆர்.என் .ரவி இன்று மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனம் அவர்களை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக் கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். தமிழகத்திலேயே, தமிழக ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் ஏற்காது என்பதோடு, கழகத்தின் சார்பில் இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )