தலைப்பு செய்திகள்
ஜே.இ.இ.மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜே.இ.இ. எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் இவை 2 கட்டங்களான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வுகளாக நடைபெற்று வருகிறது.
2022- 2023ம் நிதியாண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய முகமை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதற்கு முன்னர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை முதல்நிலைத் தேர்வு நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாதத்துக்கு ஜே.இ.இ. தேர்வின் முதல் அமர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளுது. இந்நிலையில் தேசிய தேர்வு முகமை மீண்டும் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையை தொடங்கியுள்ளது. 2ம்கட்ட ஜே.இ.இ. மெயின் ரோடு வருகிற ஜூலை 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

முதல் கட்டத்தேர்வு வருகிற 21ம் தேதி (நாளை) முதல் மே 4 ம்தேதிவரையிலும், 2ம் கட்ட தேர்வு வருகிற மே மாதம் 24ம தேதி முதல் 29ம் தேதிவரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை முன்னர் அறிவித்து இருந்தது.
முதல் கட்டத்தேர்வு வருகிற 21ம் தேதி (நாளை) முதல் மே 4 ம்தேதிவரையிலும், 2ம் கட்ட தேர்வு வருகிற மே மாதம் 24ம தேதி முதல் 29ம் தேதிவரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை முன்னர் அறிவித்து இருந்தது.
தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தநிலையில், ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் இன்னும் 2 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த தேர்வுகள், ஜூன், ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையில் 9 நாட்கள் தேர்வுகள் நடைபெறுகிறது.
அதேபோல், மே மாதத்தில் நடத்துவதாக இருந்த இரண்டாம் பிரதான தேர்வு ஜூலை 20ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
காலை 9 மணி முதல் 12 மணிவரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிவரையிலுமாக 2 ஷிப்டுகளாக நடைபெற உள்ளது.
முதல் கட்ட ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், 2ம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டுக்கான ஜே.இ.இ. தேர்வின் முதல் அமர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய முகமை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆன்லைனின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும், புதிதாக சமர்ப்பிக்கவும் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் ஏற்கனவே கடந்த 18ம் தேதி தொடங்கி, வருகிற 25ம் தேதி வரை புதிதாக சமர்ப்பிக்கவும், பூர்த்தி செய்வதற்குமான வசதி நடைமுறையில் இருக்கும். இந்த குறிப்பிட்ட தேதிகளில் மாலை 5 மணிவரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளவும், இரவு 11.50 மணிவரை கட்டணத்தை செலுத்தும் பணியும் நடைபெறுகிறுது.
மேலும் விவரங்களுக்கு 011- 40579000/011- 69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு அறியலாம்.
இந்த ஆண்டும், கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாள் 1ல் உள்ள 2 பகுதிகளுக்கும் நெகட்டிவ் மதிப்பெண் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேட்கப்படும் 90 கேள்விகளில் (இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம்- தலா 30 கேள்விகள்) இருந்து மாணவர்கள் 75 கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறை அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
