BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி: மாவட்ட கலெக்டர்  ஆர்த்தி தொடங்கி வைப்பு!

மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டுப்  போட்டிகளை மாவட்டக் கலெக்டர் ஆர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் 50 மீ, 100 மீ, 500 மீ ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி பந்தயம், பார்வையற்றோர்களுக்கு 50 மீ, 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், பூப்பந்து எறிதல், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு 50 மீ, 100 மீ ஓட்டம், மென் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், காது கேளாதோருக்கு 100 மீ, 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டம் ஆகிய தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும் கை, கால் ஊனமுற்றவர்களுக்கு இறகு பந்து,  பார்வையற்றோர்களுக்கு கையுந்து பந்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எறிபந்து, காது கேளாதோருக்கு கபடி போட்டியும் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதில் முதல் இடம் பிடித்த வீரர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )