மாவட்ட செய்திகள்
அதிமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனு தாக்கல்.
அதிமுக வில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளன. இந்நிலையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தற்போது மாவட்டச் செயலாளராக இருந்து வரும் முன்னாள் எம்பி யும், தற்போதைய எம்எல்ஏ வுமான சி.மகேந்திரன் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
ஆனையாளர் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ வுமான ராஜன் செல்லப்பாவிடம் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். மேலும் மாவட்ட அளவிலான பொறுப்புக ளுக்கும், பொதுக் குழு உறுப்பினர்கள் பதவிக்கும் நிர்வாகிகள் விருப்ப மனுக்களை அளித்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.