தலைப்பு செய்திகள்
12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்: தமிழ்நாட்டின் நிலை?

குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்கள் வரும் நாட்களில் மின்சார தட்டுப்பாட்டால் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவின் ஒட்டு மொத்த மின்தேவையில் 53 சதவீதம் அனல்மின் நிலையங்களே தரும் நிலையில், தற்போது நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு மின்சார உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் மின்வெட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் 100 அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. ஒட்டுமொத்தத்தில் 6.7 கோடி டன் நிலக்கரி கையிருப்பு அவசியம் என்ற நிலையில், தற்போது 2.3 கோடி டன் மட்டுமே இருப்பில் உள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்
