மாவட்ட செய்திகள்
காட்பாடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு!
வேலூர் மாவட்டம் ,காட்பாடி ரயில் நிலையத்தில் பல்வேறு கட்ட பணிகள் குறித்து தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைமேடை ரயில்வே மேம்பாலம், மின் பொறியாளர் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் ரயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார் .அதனையடுத்து வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ,காட்பாடி ,ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி ரயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர் .இந்த ஆய்வின்போது காட்பாடி ரயில் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.