மாவட்ட செய்திகள்
கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் பிறமாநிலத்தை சேர்ந்த தற்காலிக பணியாளர்களை விடுவித்து தமிழக மருத்துவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை.
கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் பிறமாநிலத்தை சேர்ந்த தற்காலிக பணியாளர்களை விடுவித்து தமிழக மருத்துவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சோ.சுரேஷ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது.
தமிழகத்தின் ஒரே அரசு ஆயுர்வேதக்கல்லூரி தி.மு.க ஆட்சியில் கோட்டாரில் தாெ டங்கப்பட்டது. இடைப்பட்ட பத்து வருடங்களில் பல்வேறு அரசு விதிமுறைகளை மீறி தற்காலிக பணியாளர்கள் என பல பிறமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்கள் தற்பாேது வரை தாெடர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் தமிழ் பேச தெரியாதவர்கள். இருவரை தவிர மற்றவர்கள் அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழ்மொழி தேர்வில் வெற்றி பெறாதவர்கள். இது இவர்களின் தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் உள்ள வெறுப்பை காட்டுகிறது. இப்பிறமாநிலத்தவர்களால் அரசிற்கோ, கல்லூரி நிர்வாகத்திற்கோ, மாணவர்களுக்கோ, அரசின் மருத்துவமனையை தேடிச்செல்லும் ஏழை, நடுத்தர பொது மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இவர்கள் தமிழில் பேசாமல் எப்படி மருத்துவம் செய்வர்.
தமிழ்நாடு அரசு கல்லூரியை துவங்கியதின் நோக்கம் தமிழக மக்களுக்கு பயன்படுவதற்கு ஆகும். பிறமாநிலத்தவர்களால் அந்த நோக்கம் நிறைவேறாமல் போகுமாே என்ற அச்சம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக இதில் அதிக கவனம் செலுத்தி வெளிமாநில தற்காலிக பணியாளர்களை விடுவித்து தமிழக மருத்துவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .
இவ்வாறு தமிழக வாழ்வுரிமை கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சோ.சுரேஷ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.