BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மாவட்ட குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா.

கணவருடன் வந்து கையெழுத்துப் போட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா

மாவட்ட குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் கணவர் வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவரும் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்டுச் சென்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன் (65). இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது ராசிபுரம் காவல் நி்லையத்தில் பண மோசடி புகார் அளித்தார். புகாரில் சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 15 பேர் தன்னிடம் ரூ.76.50 லட்சம் பணம் அளித்தனர்.

அந்த தொகையை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன். எனினும், அவர் வேலை எதுவும் வாங்கித் தரவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்னாளர் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சனும் கடந்த சில தினங்களுக்கு முன் ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து நிபந்தனை ஜாமீன் பெற்றனர். அப்போது இருவரும் மறு உத்தரவு வரும் வரை வாரந்தோறும் சனிக்கிழமை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும்படி உத்திரவிட்டப்பட்டது.

அதன்படி முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சனும் இன்று காலை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்டுச் சென்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )