தலைப்பு செய்திகள்
பிரதமர் மோடிக்கு ருத்ராட்ச மாலையை அளித்து மகிழ்ந்த இந்தி நடிகர் அனுபம்கெர் தனது அனுபவங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அனுபம்கெர். இவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு ருத்ராட்ச மணிகளை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார். அப்போது பிரதமருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘‘இன்று பிரதமர் மோடியை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இரவு பகல் பாராமல் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுகாகவும் உழைத்துக் கொண்டிருக்கும் உங்களது கடின உழைப்பிற்கு நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது அம்மா அனுப்பிய ருத்ராட்ச மாலையை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். அதனை எப்போதும் நான் என் நினைவில் வைத்திருப்பேன். கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். மேலும் அனைவருக்கும் இதேபோல் ஆற்றலை கொடுத்து கொண்டே இருங்கள். ஜெய்ஹிந்த் என்று கூறி பிரதமருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த பிரமதர் மோடி கூறுகையில், ‘‘மிக்க நன்றி அனுபம்கெர். மதிப்பிற்குரிய உங்கள் அம்மா மற்றும் நாட்டு மக்களின் ஆசீர்வாதமே இந்தியாவிற்கு சேவை செய்ய என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது’’ என்று கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.இந்தி திரையுலகில் பிரபலமான நடிகர் அனுபம் கெர், கடந்த 2020ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.